Type Here to Get Search Results !

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.... பிரதமர் மோடி விமர்சனம்

 திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

லோக்சபா தேர்தலையொட்டி மேற்கு வங்க மாநில நாடாளுமன்றத்தில் பிரச்சாரம் செய்த அவர், முதலில் மேற்கு வங்கத்தை சூறையாடிய காங்கிரசும், இடதுசாரிகளும் தான், தற்போது திரிணாமுல் காங்கிரஸ் இரு கைகளாலும் மாநிலத்தை சூறையாடுகிறது என்று குற்றம் சாட்டினார்.

சிபிஎம் கட்சிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்குக் கொடுப்பதற்குச் சமம் என்று கூறிய அவர், இரு கட்சிகளும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல செயல்படுவதாகக் குறிப்பிட்டார்.

மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளை எதிர்க்கும் முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லியில் மட்டும் அக்கட்சியுடன் நட்பு பாராட்டுவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.