ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்தது குறித்து ஜூன் 10ஆம் தேதிக்குப் பிறகு விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஏழை மாநிலமான ஒடிசாவை காங்கிரஸ் தலைவர்கள் முதலில் கொள்ளையடித்ததாகவும், கடந்த 25 ஆண்டுகளாக பிஜு ஜனதா தளம் கொள்ளையடித்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஒடிசா முதல்வரால் இப்போது தனியாக எந்த வேலையும் செய்ய முடியாது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவதாகவும் பிரதமர் கூறினார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததற்குப் பின்னால் சதி இருப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் என்று கூறிய மோடி, ஜூன் 10-ம் தேதி பாஜக ஆட்சி அமைத்ததும் முதல்வரின் உடல்நிலை குறித்து சிறப்புக் குழு விசாரணை நடத்தும் என்றும் பிரதமர் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை திருவிழா போல் கொண்டாடி வருவதாகவும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு 500 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.


AthibAn Tv