Type Here to Get Search Results !

பருவநிலை மாற்றத்தை ஆய்வு செய்ய பிரத்யேக செயற்கைக்கோள்

 ஐரோப்பிய ஒன்றியமும், ஜப்பானும் இணைந்து பருவநிலை மாற்றத்தை ஆய்வு செய்ய பிரத்யேக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளன.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இரண்டரை டன் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றுகிறது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி நிபுணர் ராபின் ஹோகன் கூறுகையில், மேகங்கள் காலநிலை மாற்றத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த தகவல்களை இந்த செயற்கைக்கோள் சேகரிக்கும் என்றும், சிக்கல் நிறைந்த செயற்கைக்கோள் திட்டம் ஏவப்பட்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவடைந்துள்ளதாகவும் கூறினார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.