Type Here to Get Search Results !

தமிழக கல்லூரி பாடத்திட்டத்தில் திராவிட இயக்கக் கதைகள் நிறைந்திருப்பதாக விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

 தமிழக கல்லூரி பாடத்திட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இருநாள் மாநாட்டை ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதேஷ்குமார் கலந்து கொண்டார்.

இரண்டாம் நாளாக நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர், தமிழக கல்லூரிகளில் பேராசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தை விமர்சித்த அவர், தமிழக கல்லூரி பாடத்திட்டங்களில் வள்ளலார், அய்யா வைகுண்டர், சுவாமி சகஜானந்தா போன்றோர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

அதே சமயம் பாடத்திட்டத்தில் திராவிட இயக்கக் கதைகள் நிறைந்திருப்பதாகவும் விமர்சித்தார். குறிப்பாக தேசிய அளவிலான சுதந்திரப் போராட்ட தலைவர்களின் பெயர்கள் தமிழக பாடப்புத்தகத்தில் இடம்பெறவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பினார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.