மக்களவைத் தேர்தலில் பாஜகவின் 400 இடங்கள் என்ற இலக்கை நிச்சயம் எட்டுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 2024 மக்களவைத் தேர்தலில் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெறும்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் பாஜக 24 முதல் 30 இடங்களையும், ஒடிசாவில் உள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 75 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக அமித்ஷா தெரிவித்தார்.
தெலுங்கானாவில் மொத்தமுள்ள 17 தொகுதிகளில் பாஜக 10 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதால் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் ஆட்சி அமைக்கும் என்றார்.
கிழக்கு மாநிலங்களான ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் பாஜக பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் என்றும், கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் தங்களின் இலக்கான 400 இடங்கள் நிறைவேற்றப்படும் என அமித்ஷா உறுதியளித்தார்.


AthibAn Tv