Type Here to Get Search Results !

இந்திய விண்வெளி வீரர்களுக்கு நாசாவில் பயிற்சி

 அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் இந்திய விண்வெளி வீரர்களையும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப இந்திய விண்வெளி வீரர்களுக்கு நாசாவில் பயிற்சி அளிக்கப்படும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் இஸ்ரோ ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசிய அவர், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இரு நாட்டு விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்வார்கள்.

பூமியின் மேற்பரப்பு, இயற்கை அபாயங்கள் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவற்றை கண்காணிக்கும் நிசார் செயற்கைக்கோள் விரைவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் என்றும் எரிக் கார்ஷெட்டி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.