Type Here to Get Search Results !

திரிணாமுல் காங்கிரஸ் ஊடுருவல்காரர்களின் குடியேற்றத்தை விரும்புகிறது... பிரதமர் மோடி

 திரிணாமுல் காங்கிரஸ் ஊடுருவல்காரர்களின் குடியேற்றத்தை விரும்புகிறது என்று பிரதமர் மோடி கூறுகிறார்.

மேற்கு வங்க மாநிலம் மதுராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பேசியவர்,

வங்காள இளைஞர்களுக்கான வாய்ப்புகளை ஊடுருவல்காரர்கள் பறித்து வருகின்றனர் என்றார்.

மாநில அரசு அவர்களை குடியேற அனுமதிப்பதாகவும், இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் கூறினார்.

அரசியல் ஆதாயத்திற்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்த்ததாகவும் அவர் கூறினார்.

முஸ்லிம் இடஒதுக்கீடு தொடர்பான கல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பை மம்தா பானர்ஜி எதிர்த்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் மத்திய திட்டங்களை செயல்படுத்தாமல், வங்காளத்தை எதிர் திசையில் கொண்டு செல்கிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

உங்களின் ஒரு வாக்கு திரிணாமுல் காங்கிரஸின் தவறான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.