கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் சென்னையில் மடிக்கணினியை சார்ஜ் செய்யும் போது ஏற்பட்ட மின் விபத்தில் உயிரிழந்தார்.

கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்த டாக்டர் சரணிதா ஒரு மாதப் பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார்.
இவர் அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், ஓட்டலில் லேப்டாப்பை சார்ஜ் செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் சரணிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


AthibAn Tv