பாலியல் புகார் வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா வரும் 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.வுமான ரேவண்ணா, கடந்த 4ம் தேதி தனது வீட்டு வேலைக்காரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது மகனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றதால், அவரை தேடப்படும் நபராக அறிவித்து அனைத்து விமான நிலையங்களிலும் சிறப்பு புலனாய்வு குழு லுக் அவுட் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எந்த நேரமும் கைது பயம் ஏற்படும் என கூறப்பட்ட நிலையில், வரும் 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்திற்கு கர்நாடக மாநில மக்களிடமும், தேவகவுடா குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்ட பிரஜ்வல் ரேவண்ணா, தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.


AthibAn Tv