ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் 88 தொகுதிகளுக்கும், 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு 3ம் கட்ட தேர்தல் கடந்த 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4வது கட்ட தேர்தல் கடந்த மாதம் 13ம் தேதி நடந்தது. இதையடுத்து 49 தொகுதிகளுக்கு 5ம் கட்ட தேர்தல் கடந்த 20ம் தேதி நடந்தது.
அதன்படி 58 தொகுதிகளுக்கு இன்று 6ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து ஜூன் 1ம் தேதி 7ம் கட்ட தேர்தல் நடக்கிறது.ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 5 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற தேர்தலுடன் சில மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. இதற்கிடையில், மத்திய அரசு ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் தொகுதி மீண்டும் வரையப்பட்டது. 83 சட்டசபை தொகுதிகளில் இருந்து 90 தொகுதிகளாக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலும் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களித்த செய்தியை கேட்கும் போது என் காதுகளுக்கு இசையாக இருக்கிறது. தேர்தலில் மக்கள் பங்கேற்பதன் மூலம் ஜனநாயகத்தின் வேர்கள் வலுப்பெறுகின்றன.
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அரசு தேவை. ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டசபை தேர்தலை நடத்த ஆர்வமாக உள்ளோம் என்றார்.


AthibAn Tv