Type Here to Get Search Results !

ரூ.1,000 கோடி ஒப்பந்தம்… முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி...?

 சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியைப் பயன்படுத்தி, பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி ஒப்பந்தத்தை தமிழக அரசு நிறுவனமான எல்காட் நிறுவனத்துக்கு வழங்காமல் கேரள மாநில அரசு நிறுவனமான கெல்ட்ரான் நிறுவனத்துக்கு வழங்கியதன் பின்னணியை முதல்வர் தெளிவுபடுத்துவாரா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் அறிக்கையில்,

ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளாகியும், மாநிலத்தின் வளர்ச்சிக்கோ, மக்கள் நலனுக்கோ எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றாத திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், தொடர்ந்து இயங்கி வருகிறார். வெறும் விளம்பரங்கள், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட முயற்சிப்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.

பள்ளிக் கல்வி மேம்பாட்டிற்காக மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி ரூ.5,858.32 கோடி.

திமுகவின் சாதனைகளாக செயல்தலைவர் ஸ்டாலின் காட்ட முயல்வது அனைத்தும் மத்திய அரசு நிதியில் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் செய்யப்பட்டவை.

பள்ளிக் கல்வித்துறையில் தி.மு.க.,வின் ஒரே சாதனை, மழலையர் வகுப்புகளுக்கு, இரண்டு ஆண்டுகளாக கட்டாய கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கு நிதி வழங்கவில்லை.

உண்மை இப்படியென்றால், கொஞ்சம் கூட வெட்கப்படாமல் இவற்றை திமுகவின் சாதனைகளாக முன்வைக்க முயல்வது கேலிக்கூத்தானது.

அதுமட்டுமின்றி, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியைப் பயன்படுத்தி, பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்துக்கு ரூ. 1,000 கோடி ஒப்பந்தத்தை தமிழக அரசு நிறுவனமான எல்காட் நிறுவனத்துக்கு வழங்காமல் கேரள மாநில அரசு நிறுவனமான கெல்ட்ரான் நிறுவனத்துக்கு வழங்கியதன் பின்னணியை முதல்வர் தெளிவுபடுத்துவாரா? அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.