Type Here to Get Search Results !

ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்... கல்வித்துறை

 தமிழகத்தில், "கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், தற்போது ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்" என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது.

மேலும் பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வெப்ப சலனம் காரணமாக 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக சில மாநிலங்களில் ஜூன் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

"ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்" என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.