
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஹோமியோ மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த மஹாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் மஹாராஷ்டிரா மாநிலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மாநில அரசு திணறி வருகிறது. அலோபதி மருந்துகளுக்கு மாற்றாக ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருந்துகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
கொரோனா சிகிச்சையில் ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தும், யுனானி மற்றும் ஆயுர்வேத மருந்துகளான அகஸ்திய ஹரிடகி, ஆயுஷ் 634, நல்லெண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளன. கிராமப்புறங்களில் வசிக்கும் 55 வயதிற்கு அதிகமானவர்களுக்கு ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மத்திய ஆயுஷ் அமைச்சகம் இம்மருந்தினை டில்லி, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களில் வழங்க திட்டமிட்டிருந்தது. இம்மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், ஆர்சனிக் ஆல்பம் 30 கொரோனாவை தடுக்கும் என்று ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. பரிசோதிக்கப்படாத மருந்துகளை கொரோனாவுக்கு பயன்படுத்துவதால் பாதிப்பை மேலும் தீவிரமாக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


AthibAn Tv