Type Here to Get Search Results !

அவசர காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கும் படி சுகாதாரத்துறைக்கு மோடி அறிவுரை

அவசரக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராக ...

அவசர காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கும் படி மத்திய சுகாதாரத்துறைக்கு மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

இது குறித்து கூறப்படுவதாவது: நாடு முழுவதும் கொரோன தொற்றுவின் வீரியம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கையை மத்திய சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து கொரோனா தடுப்புநடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் என பிரதமர் அறிவுரை வழங்கி உள்ளார்.

நாளை அவசர ஆலோனை:

தமிழகம், மகாராஷ்டிரா, டில்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்,ஐ.சி.எம்.ஆர் தலைவர் பல்ராம் பார்கவா ஆகியோரிடம்,நோயாளிகளுக்கான பரிசோதனை , படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் பரிசோதனை அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து நாளை (14ம் தேதி) அவசர ஆலோசனை நடத்த உள்ளார் என கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.