
தமிழகத்தில் முதலீடுசெய்ய நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து கூறப்படுவதாவது: தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள கேட் ஸ்பேட், பாசில் குழுமம், நைக், அடிடாஸ் ஏனஜி மேட்டல் இங் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை அலுவலர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான சூழ்நிலைகளை பட்டியலிட்டு தனித்தனியே கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:
நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் உலகளவில் தலைசிறந்த 5 முன்னணி நிறுவனங்களான "கேட் ஸ்பேட், பாசில் குழுமம், நைக், அடிடாஸ் ஏஜி, மற்றும் மேட்டல் இங்க்" நிறுவனங்களின் தலைமை அலுவர்களுக்கு தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்திட நான் நேரடியாக கடிதம் எழுதியுள்ளேன்.— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 12, 2020


AthibAn Tv