Type Here to Get Search Results !

காங்கிரஸ் ஆட்சியில் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதியுதவி

சீனத் தூதரகத்திலிருந்து ராஜிவ் ...

காங்கிரஸ் ஆட்சியில் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதியுதவி அளித்துள்ளது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: காங்கிரஸ் கட்சி இந்தியா சீனாவிடம் சரண் அடைந்து விட்டதாக கூறி வருகிறது. ஆனால் 2005-06ம் ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சீன தூதரகம் ராஜிவ் அறக்கட்டளைக்கு நதி உதவி அளிக்கப்பட்டு வந்துள்ளது.

அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சீனாவிடம் இருந்து லஞ்சம் வாங்கியதா? சீனாவிடம் இருந்து பணம் பெறப்பட்டு இருந்தால் அந்த பணம் எவ்வாறு பயன் படுத்தப்பட்டது என்பதை காங்கிரஸ் விளக்க வேண்டும். காங்கிரஸ் எதையும் மறைக்கிறதா? காங்கிரசுக்கும் சீனாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுஉள்ளதா? என கூறினார்.

இதனை மறுத்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா உண்மையான பிரச்னைகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை பா.ஜ.க திசை திருப்ப முயற்சிக்கிறது. என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.