Type Here to Get Search Results !

இந்தியாவில் ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா: 407 பேர் பலி



இந்தியாவில் நேற்று (ஜூன் 25) ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.9 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 17,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 90 ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 463 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 85 ஆயிரத்து 636 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும், 13,940 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 407 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 301 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு விவரம்

மாநிலம்- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை- பலி
மஹாராஷ்டிரா - 1,47,741 - 6,931
டில்லி - 73,780 - 2,429
தமிழகம் -70,977 - 911
குஜராத்- 29,520 -1,753
உ.பி.,-20,193-611
ராஜஸ்தான்-16,296-379
மேற்கு வங்கம்- 15,648-606
ம.பி.,-12,596-542
ஹரியானா-12,463-198
தெலுங்கானா-11,364-230
ஆந்திரா- 10,884 -230
கர்நாடகா-10,560- 170
பீஹார்-8,473-57
காஷ்மீர்-6,549-90
அசாம்-6,321-09
ஒடிசா-5,962-17
பஞ்சாப்- 4,679-120
கேரளா-3,726-22
உத்தர்காண்ட்-2,691-36
சத்தீஸ்கர்-2,452-12
ஜார்க்கண்ட்-2,262-12
திரிபுரா-1,290-01
மணிப்பூர்-1,056-0
கோவா-995-2
லடாக்-941-01
ஹிமாச்சல பிரதேசம்-839-09
புதுச்சேரி-502 -09
சண்டிகர்-423-06
நாகலாந்து-355-0
அருணாச்சல பிரதேசம் - 160- 1
தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் டியூ - 155-0
மிசோரம்-145-0

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.