Type Here to Get Search Results !

பாகிஸ்தானின் உளவு டுரோனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர்(பிஎஸ்எப்) சுட்டு வீழ்த்தினர்.



இந்திய பகுதிக்குள் வந்த பாகிஸ்தானின் உளவு டுரோனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர்(பிஎஸ்எப்) சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில், சர்வதேச எல்லை அருகே உள்ள பன்சார் செக்போஸ்ட்டில், இன்று காலை 5: 10 மணியளவில், இந்திய பகுதிக்குள் 250 மீட்டர் தூரம் வரை பாகிஸ்தானின் உளவு டுரோன் வந்துள்ளது. இதனை பார்த்த எல்லை பாதுகாப்பு படை எஸ்ஐ தேவேந்திர சிங், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் 8 ரவுண்டுகள் சுட்டு அந்த டுரோனை வீழ்த்தினார். அதில் இருந்த பல ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.