Type Here to Get Search Results !

லடாக், எல்லை பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்காக இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

லடாக் எல்லை பிரச்சனையில் இந்திய ...

 லடாக், எல்லை பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்காக இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர் சீன தரப்பில் 45 பேர் உயிரிழந்தனர். இதனால், எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த தாக்குதலை தொடர்ந்து எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதனை தணிக்க இருநாட்டு உயரதிகாரிகள் நேற்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், நிலைமையை சீராக்க இன்று இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்திய தரப்பில், மேஜர் ஜெனரல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

1962 சீன போருக்கு பின்னர், எல்லை பகுதியில் சீனா எவ்வித உரிமையும் கோரவில்லை. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து பணியிலும் ஈடுபடவில்லை. லடாக்கின் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து சீன வீரர்கள் வெளியேறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. கால்வான் பள்ளத்தாக்கின் முழு பகுதியையும் உரிமை கோருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.