
பொது மக்கள் சீன உணவுகளை புறக்கணிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.
லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய வீரர்கள் மீது சீன வீரர்கள் தாக்கியதில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனையடுத்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் எழுந்துள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், சீன உணவுகள் விற்பதை உணவகங்கள் நிறுத்த வேண்டும். சீன உணவுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


AthibAn Tv