Type Here to Get Search Results !

சீன அதிபரை எதிர்ப்பதுபோல டிரம்ப் நாடகமாடிக்கொண்டு உள்ளுக்குள் நட்புறவை பேணுகிறார் போல்டன் குற்றஞ்சாட்டினார்

latest tamil news

முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் போல்டன் தனது புத்தகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இதில் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜிங் பிங்கிடம் 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். சீனாவில் உள்ள உய்குர் இஸ்லாமியர்களுக்கு கான்சண்ட்ரேஷன் கேம்ப்கள் கட்ட டிரம்ப் ஆதரவு தெரிவித்ததாகவும் அது சரியான செயல் என பாராட்டியதாகவும் போல்டன் குற்றஞ்சாட்டி உள்ளார். ஏற்கனவே அமெரிக்க இஸ்லாமியர்களை டிரம்ப் ஒடுக்குகிறார் என்ற குற்றச்சாட்டை எதிர்கட்சியான ஜனநாயக கட்சி முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒசாகாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பேசிய டிரம்ப், விவசாயிகள் நலன்கருதி சீன சோயாபீன், கோதுமை உள்ளிட்டவற்றை அமெரிக்கா வாங்க ஏற்பாடு செய்வேன் எனப் பேசினார் என்று போல்டன் கூறி உள்ளார். மேலும் டிரம்பின் இந்த வார்த்தைகளை தான் ஆவணப்படுத்த முயற்சித்தபோது அதனைச் செய்ய விடாமல் தடுக்கப்பட்டதாகக் கூறி உள்ளார். 2020 தேர்தலில் வெற்றி பெற 350 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை சீனாவுடன் முடிக்க டிரம்ப் திட்டம் இட்டார் என போல்டன் குற்றஞ்சாட்டினார்.

ஜான் போல்டன் ஒரு பொய்யர் என டிரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகைக்கும் அவர் பேட்டி அளித்துள்ளார். கொரோனா தாக்கத்தை அடுத்து சீன அதிபரை எதிர்ப்பதுபோல டிரம்ப் நாடகமாடிக்கொண்டு உள்ளுக்குள் நட்புறவை பேணுகிறார் என போல்டன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.