
எல்லையில் அத்துமீறுவதையும், ஆத்திரமூட்டும் செயல்களை இந்தியா நிறுத்தி விட்டு, சீனாவுடன் இணைந்து, பேச்சுவார்த்தையை சரியான திசைக்கு கொண்டு வருவதுடன், பிரச்னைகளை பேச்சுமூலம் தீர்க்க வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன ராணுவத்தின் மேற்கு பிராந்திய மூத்த ராணுவ அதிகாரி ஜாங் ஷூலி கூறுகையில், எல்லையில் தொடர்ச்சியாக அத்துமீறியதுடன், கல்வான் பகுதியில் சீன பகுதியில் எல்லை கட்டுப்பாட்டை தாண்டி வந்து தாக்குதல் நடத்தியது. இதனால் கைகலப்பு ஏற்பட்டதுடன் உயிரிழப்பு ஏற்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ரீதியில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையை இந்தியா மீறியது. இந்த பகுதி சீனாவிற்கு சொந்தமானது. இந்தியாவின் நடவடிக்கை, ராணுவ உறவை மீறியது.
இந்தியா, தனது ராணுவத்தை கட்டுப்படுத்துவதுடன், அத்துமீறலையும், கோபமூட்டும் நடவடிக்கையையும் நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தையை சரியான திசைக்கு கொண்டு வரவும், பிரச்னையை பேச்சுமூலம் தீர்க்கவும் சீனாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.


AthibAn Tv