
2020ம் ஆண்டு முடியும்வரை ஆஸ்திரேலியாவில் எல்லைகள் மூடப்படும் என்று அந்நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க உலக நாடுகள் அனைத்தும் எல்லைகள் மூடப்பட்டு, ஊரடங்கினை அமல்படுத்தின. ஆனாலும், கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 7,370 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 102 பேர் உயிரிழந்தனர், 6,859 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பரவலை கிட்டத்தட்ட கட்டுப்படுத்தினாலும், ஆண்டு இறுதிவரை எல்லை மூடலை தொடர இருப்பதாகவும், அதில் சில விலக்குகளையும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய வர்த்தகத்துறை அமைச்சர் சைமன் பிர்மின்கங், செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா திரும்புபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி நோய்ப் பரவலை தடுத்து வருகிறோம். நாட்டில் எல்லை மூடல், 2020ம் ஆண்டுவரை தொடரும். ஆனாலும், இதிலிருந்து சர்வதேச மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


AthibAn Tv