இங்கிலாந்தில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக மத்திய லண்டனில் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் மூன்று சக்தி வாய்ந்த இடி மின்னலில் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையம் அங்குள்ள முக்கியமான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்று. கடந்த ஜூன் 6-ம் தேதி இப்பகுதியில் மோசமான வானிலை நிலவியது. வானில் கரு மேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் காட்சியளித்தன. அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தனது வீட்டின் ஏழாவது மாடியிலிருந்து கருமேகம் சூழ்ந்த வானில் பறக்கும் விமானத்தை அவர் படமெடுத்துக் கொண்டிருந்தார். சில நொடிகளில் மிகப்பெரிய சத்தத்துடன் ஏற்பட்ட இடி மின்னல் விமானத்தை தாக்கியது. கிட்டத்தட்ட அந்த மின்னல் தரையை தொட்டது. வெவ்வேறு திசைகளிலிருந்து மூன்று முறை ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் சிக்கியும் எந்த சலனமும் இன்றி அந்த விமானம் தரையிறங்கியது.



AthibAn Tv