Type Here to Get Search Results !

தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு இது வெற்றியடைந்தால் உலகிலிருந்து கொரோனாவை ஒழித்துவிடலாம்

These 23 companies are working on coronavirus treatments or ...

பிரெஞ்சு மருந்து தயாரிப்பு நிறுவனமான சனோபி தற்போது கொரோனா தாக்கத்துக்கு ஒர் புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதற்கு உரிமம் பெற முயன்று வருகிறது. இது வெற்றியடைந்தால் உலகிலிருந்து கொரோனாவை ஒழித்துவிடலாம் என நம்பப்படுகிறது. இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

பிரிட்டனின் கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் நிறுவனத்துடன் இணைந்து சனோபி இந்த பணியை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிபெற்றால் 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் தடுப்பு மருந்து விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மருந்து தர நிர்ணய ஆணையத்தின் அனுமதிக்காக தங்கள் நிறுவனம் காத்திருப்பதாக இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான் ரீட் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க 9 லட்சம் பேரை பாதித்துள்ள கொரோனாவுக்கு தற்போதுவரை எந்த மருந்து நிறுவனமும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. கொரோனா தாக்கம் காரணமாக 4 லட்சத்து 69 ஆயிரம் பேர் உலகளவில் மரணமடைந்துள்ளனர். இதனையடுத்து பல மருந்து நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. முதலில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நிறுவனம் உலகளவில் அதிக லாபமீட்டும் என்பதில் சந்தேகமில்லை. இதையடுத்து சனோபி நிறுவனம் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. அதில் முக்கியமானது அதிக அளவில் மருந்து தயாரிப்பது ஆகும். அனைத்து நாடுகளுக்கும் தேவையான அதிக அளவு மருந்தை தயாரிப்பது மிகவும் சிரமமான விஷயம். இருந்தாலும் இந்த பிரஞ்சு நிறுவனம் இந்த சிரமத்தை எதிர்கொண்டு உற்பத்தி எண்ணிக்கையை பெருக்கும் என அதன் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சனோபி நிறுவனம் முன்னதாக பிளூ நோய்க்கு மருந்து கண்டுபிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பயோமெடிக்கல் அட்வான்ஸ் ரீசார்ஜ் மற்றும் டெவலப்மென்ட் அத்தாரிட்டி அமைப்பின் முழு ஒத்துழைப்பு இதற்கு உள்ளது. 2021ம் ஆண்டு சனோபி நிறுவனம் ஒரு பில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்யும் என நம்புகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.