Type Here to Get Search Results !

சீனப் பொருட்களை தீயிட்டு கொளுத்தினர். திபெத் மக்கள் போராட்டம்

india, china, tibet, people, protest, இந்தியா, சீனா, திபெத், மக்கள், போராட்டம்

சீனாவின் அடாவடித்தனமான நடவடிக்கையை கண்டித்து திபெத் மக்கள் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த திங்கள் மாலை சீன ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் கூரிய இரும்பு ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பியால் நம் வீரர்களை தாக்கி உள்ளனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நம் வீரர்கள் தந்த பதிலடியில் சீன தரப்பிலும் 43 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சீனாவின் இந்த அடாவடித்தனமான நடவடிக்கையை கண்டித்து நாடெங்கிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள திபெத் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு திபெத் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சீனப் பொருட்களை தீயிட்டு கொளுத்தினர். சீன மொபைல் போன் உள்ளிட்ட சீன பொருட்களை வாங்க வேண்டாம் என வலியுறுத்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.