Type Here to Get Search Results !

'சீனர்கள் ஒரு போதும் நம்பிக்கைக்கு உரியவர்கள் கிடையாது, முன்னாள் தலைவர் ககன்ஜூத்

சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு ...


எல்லைப்பகுதியில் நிலவி வந்த பதற்றமான சூழ்நிலையில், சீனர்களை நம்பி நம் இந்திய வீரர்கள் மிகப் பெரிய தவறு செய்து விட்டதாக இந்திய ராணுவத்தின் மலையேற்ற பிரிவு நிபுணரும் ராணுவ நுண்ணறிவு பிரிவின் முன்னாள் தலைவருமான ககன்ஜூத் கூறினார்..

இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது, 'சீனர்கள் ஒரு போதும் நம்பிக்கைக்கு உரியவர்கள் கிடையாது, சூழ்நிலையைப் பொறுத்து உங்களுக்கு உணவு, பானங்கள் கொடுத்து உபசரிப்பார்கள். ஆனால் , நம்மை எப்படி தாக்குவது என்று திட்டமிடுவார்கள். அவர்களுடைய ராணுவ கோட்பாடு எதிராளியை உணவு உபசரிப்பின் போது கூட குத்திக் கொல்ல அனுமதிக்கிறது. அவர்கள் சூழ்ச்சிக்காரர்கள், மூர்க்கமானவர்கள்.

இந்திய வீரர்களுக்கு இது புரியாது. நீண்டகால பாரம்பரியமான ராணுவ கொள்கைகளை இந்திய வீரர்கள் கடைப்பிடிக்கிறார்கள். எனவே நம் வீரர்கள் போரின் போதும் எதிரிகளை தழுவுவார்கள், ஆனால், ஒரு போதும் முதுகில் குத்தமாட்டார்கள். இத்தகைய நடவடிக்கைக்கு நம் இந்திய ராணுவம் தடை விதிக்கிறது. சிக்கல் என்னவென்றால், இந்த உன்னதமான எண்ணத்துடன் சீனர்களிடம் போரிட முடியாது. எனவே நம் வீரர்களும் சீனர்களைப் போலவே இரக்கமற்றவர்களாகவும், தந்திரமானவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களை கடுமையாக தாக்கக வேண்டும். சீனர்களைப் பொருத்தவரை இந்திய ராணுவ நெறி முட்டாள்தனமானது.

சீனர்களை எல்லை ரோந்து பணியில் அனுமதித்து முதல் தவறு. அங்கு அவர்கள் முகாம் அமைக்க அனுமதி அளித்திருக்கக் கூடாது. அவர்களுக்கு இதுபோல் இடம் கொடுத்ததால் திரும்ப மறுக்கிறார்கள். திங்களன்று நம் வீரர்கள் மீது நடத்திய தாக்குதல் சீன ராணுவ அதிகாரிகளின் காட்டுமிரான்டித்தனத்தை காட்டுகிறது.

நாம் நம் பக்கம் அமைதியாக தான் இருந்தோம். ஆனால், அவர்கள் யுத்த தர்மத்தை மீறி நம்மிடம் நடந்து கொள்கிறார்கள். சீனர்களின் ஆன்மாவை புரிந்து கொள்ளவில்லை என்றால் நம் வீரர்கள் அவர்களை எதிர்த்து போராட முடியாது. சிறைப்பிடிக்கப்பட்ட நிராயுதபாணியான நம் வீரர்களை கொலை செய்வார்கள். ஆனால் அனைவரையும் கொன்று விட மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் பக்கம் நியாயம் இருப்பதை காட்டுவதற்காக வீரமரணம் அடைந்த சில வீரர்களின் உடல்களையும்,,வீரர்களையும் நம்மிடம் ஒப்படைப்பார்கள். சீனர்களின் குணத்தை நம் வீரர்கள் உணர்ந்தால் நல்லது.

அரசியல்வாதிகளுக்கு அதிகம் கடமை பட்டவர்களாக மட்டும் இந்திய உயர் ராணுவ அதிகாரிகள் உள்ளார்கள். அவர்களுடைய தற்காப்பு அணுகுமுறை குறைபாடு உடையதாக உள்ளது. ஒவ்வொரு இந்திய வீரரும் இளம் லெப்டினன்ட் போல் இருக்க வேண்டும். வீரர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினால் தான் மன உறுதியையும் உற்சாகமும் அடைவார்கள்.

சீன வீரர்கள் தைரியமானவர்கள் அல்ல. அவர்களால் எப்போதும் நம் வீரர்களுக்கு இணையாக போராட முடியாது. 1962 நடந்த சண்டையின் போது 100 அல்லது 200 இந்திய வீரர்கள் அடங்கிய குழு 3000 பேர் அடங்கிய சீனர்களை எதிர்த்து போராடியது. இந்திய ராணுவம் வீரமரணம் அடையும் நம் வீரர்களை கொண்டாடி வருகிறது. நம் வீரர்களின் துணிச்சலையும் திறமையையும் காலனித்துவ காலங்களில் பிரிட்டிஷ் இந்திய ராணுவம் பயன்படுத்தி வந்தனர்.' இவ்வாறு ககன்ஜூத் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.