லடாக் தாக்குதலில், சீன ராணுவத்தினர், ஆணிகள் அடிக்கப்பட்ட இரும்பு ராடுகளை கொண்டு இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனை பாதுகாப்புத்துறை வல்லுநரான அஜய் சுக்லா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த நாட்டு ராணுவம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. இதனால், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சீன வீரர்கள் தாக்கிய ஆணியடிக்கப்பட்ட இரும்பு ராடுகளின் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதனை பிபிசி.,க்கு இந்திய ராணுவ உயரதிகாரி ஒருவர் அனுப்பி உள்ளார். மேலும், பாதுகாப்புத்துறை வல்லுநரான அஜய் சுக்லாவும் இதனை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். சீனாவுக்கு கண்டனம் தெரிவித்த அவர், இத்தகைய காட்டுமிராண்டித்தனம் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது எனவும் பதிவிட்டுள்ளார். இந்த புகைபடம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து இந்திய ராணுவம் அதிகாரபூர்வமாக எதுவும் கூறவில்லை.The nail-studded rods — captured by Indian soldiers from the Galwan Valley encounter site — with which Chinese soldiers attacked an Indian Army patrol and killed 20 Indian soldiers.— Ajai Shukla (@ajaishukla) June 18, 2020
Such barbarism must be condemned. This is thuggery, not soldiering pic.twitter.com/nFcNpyPHCQ



AthibAn Tv