Type Here to Get Search Results !

காஷ்மீர் மாணவர்களின் தொழில் கல்விக்கு பாகிஸ்தான் அரசு உதவி : இந்தியாவுக்கு பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை

Jammu & Kashmir: Jammu & Kashmir to promote all V-IX, XI students ...

காஷ்மீர் மாணவர்களின் தொழில் கல்விக்கு பாகிஸ்தான் அரசு உதவித் தொகை அளிக்க முன்வந்துள்ளது குறித்து இந்தியாவுக்கு பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த 1,600 மாணவர்களின் தொழில் கல்விக்கு பாக்., அரசு உதவித் தொகை அளிக்க முன் வந்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 150 பேர் பொறியியல் மட்டும் மருத்துவம் உள்ளிட்ட கல்வி பயிலலாம் என்று போலீசார் மதிப்பீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் பார்லியில் அந்நாட்டு அரசால் முன்வைக்கப்பட்டுள்ள கல்வி உதவித் தொகை திட்டத்தை சுட்டிக்காட்டி, காஷ்மீர் இளைஞர்கள் இடையே பயங்கரவாதத்தை பரப்பும் மிகப் பெரிய திட்டத்தின் ஒரு பகுதி இது எனவும், பாகிஸ்தான் மீது அனுதாபம் கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் என்றும் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

ஏற்கனவே, வாகா, அட்டாரி வழியாக கல்வி கற்க பாகிஸ்தான் சென்று எல்லை வழியாக பயங்கரவாதிகளாக திரும்பி வந்தவர்களை பாதுகாப்பு அமைப்புகள் உதாரணமாக காட்டியுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.