
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் ஹென்ரி லூக் கூறியதாவது, ' கடந்த 2 வாரங்களாக ஐரோப்பாவில் உள்ள 30 நாடுகளில் வைரஸ் தொற்று ஒட்டுமொத்தமாக அதிகரித்துள்ளது. இது கவலை அளிக்கிறது. இவற்றில் 11 நாடுகளில் கொரோனா பரவல் வேகமாக உள்ளது. உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் ஐரோப்பாவில் கொரோனா தொற்று குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று வேகமாக பரவும் 11 நாடுகளின் பட்டியலில் ஸ்வீடன், அர்மேனியா, அசர்பைஜான், கஜகிஸ்தான், அல்பேனியா, போஸ்னியா, உக்ரேன் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன.


AthibAn Tv