Type Here to Get Search Results !

கொரோனா வைரஸ் ஒரு வெல்ல முடியாத எதிரி. அதை யாராலும் கட்டுப்படுத்திட முடியாது

trump: ஈரான்மீது கடுமையான பொருளாதார ...

கொரோனா வைரசால் மற்ற நாடுகளை விட, அமெரிக்கா மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,302 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 21.42 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். நேற்று ஒரேநாளில், 702 பேர் உயிரிழந்துள்ளனர்; இதுவரை, 1.17 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், 'அமெரிக்காவில் தொடர்ந்து நடந்துவரும் போராட்டங்கள், பொருளாதார நடவடிக்கைகளுக்காகத் தளர்த்தப்பட்டு வரும் ஊரடங்கால் வைரஸ் பரவலை மேலும் அதிகரிக்கும்' என, சுகாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று, அமெரிக்க ராணுவ அகாடமியில் அதிபர் டிரம்ப் பேசியதாவது:
சீனா எனும் தொலைதூர தேசத்தில் இருந்து நம்முடைய நாட்டுக்கு இந்தப் புதிய கொரோனா வைரஸ் வந்துள்ளது. கொரோனா வைரஸ் ஒரு வெல்ல முடியாத எதிரி. அதை யாராலும் கட்டுப்படுத்திட முடியாது. ஆனால், விரைவில் அந்த வைரசை அமெரிக்கா தோற்கடிக்கும்.
அமெரிக்க சமூகத்துக்கு ராணுவம் அளித்திருக்கும் பங்கு நம் அனைவருக்கும் உத்வேகத்தைத் தருகிறது. கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்து போராட முன்வந்த தேசிய பாதுகாப்புப் படை, ஆயுதப்படை என ஒவ்வொரு பிரிவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த நாள் முதலே சீனா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார், அதிபர் டிரம்ப். ஆனால், அமெரிக்காவில் நிலவும் கொரோனா தொடர்பான பிரச்னைகளை திசை திருப்ப டிரம்ப், சீனா மீது குற்றச்சாட்டுகளை எழுப்புவதாக சீனாவின் உயர் அதிகாரிகள் குறிப்பிட்டு வருகின்றனர். இதனால், சீனா மற்றும் அமெரிக்கா இடையே வார்த்தைப்போர் நிலவி வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.