Type Here to Get Search Results !

அமெரிக்காவில் மீண்டும் கறுப்பினத்தவர் சுட்டுக் கொலை

போலீஸ், துப்பாக்கிச்சூடு, கறுப்பின இளைஞர், பலி, அமெரிக்கா,  போராட்டம், Protests, Black man, killed, police, Atlanta, us, death

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து பெரும் போராட்டம் நடந்த நிலையில், மற்றொரு கறுப்பினத்தவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து போராட்டம் துவங்கியுள்ளது.

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள உணவகம் முன்பு ரேஷர்ட் புரூக்ஸ்(27) என்ற கறுப்பின இளைஞர், நேற்று முன்தினம் (ஜூன் 12) இரவு காரில் தூங்கி கொண்டிருந்தார். இதனால், வாடிக்கையாளர்கள் சாப்பிட வர முடியவில்லை என உணவக ஊழியர்கள் போலீாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அங்கு வந்து, அந்த இளைஞர் மது அருந்தியுள்ளாரா என சோதனை செய்ய முயன்றனர். அதற்கு ஒத்துழைப்பு அளிக்க புரூக்ஸ் மறுத்துவிட்டார். மேலும், கைது செய்ய முற்படும் போது, போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து கொண்டு ஓட முயன்றார்.

அவரை போலீசார் பின் தொடர்ந்த போது, புரூக்ஸ் சுட முயன்றார். இதனையடுத்து, போலீசார் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதில் புரூக்ஸ் பலத்த காயமடைந்தார். இதில் படுகாயமடைந்த புரூக்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த மோதல் சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகளும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து அட்லாண்டா நகர போலீஸ் தலைவர் எரிக்கா ஷீல்ட்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனை கண்டித்து, அட்லாண்டா நகரில் போராட்டம் ஆரம்பித்துள்ளது. பல இடங்களில் சாலைகளை மறித்து போராட்டம் நடந்து வருகிறது. மின்னபொலிஸ் நகரில், ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர், போலீசார் அத்துமீறலில் உயிரிழந்ததில், அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் ஆரம்பித்த போராட்டம், உலகத்தின் பல நாடுகளிலும் போராட்டம் நடந்தது.
அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், மற்றொரு கறுப்பின இளைஞர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.