Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

latest tamil news

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர் பொது இயக்குநர் பல்ராம் பார்கவா கூறியதாவது: இந்தியா மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை. அதற்கான சூழல் இல்லை. மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். மற்ற பல நாடுகளை ஒப்பிட்டால் இந்தியாவில் பரவும் வேகமும், பாதிப்பின் அளவும் மிக குறைவாகவே உள்ளது. மத்திய அரசு மேற்கொண்ட ஊரடங்கு நடவடிக்கை பலன் அளித்துள்ளதையே இது காட்டுகிறது. ஊரடங்கால் கொரோனா வேகமாக பரவுவது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குணமடைவோர் விகிதம் 49.21 சதவீதமாக உள்ளது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.