
கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெளிப்படையாக அறிவிக்கப்படுகிறது. எதையும் மறைக்கவில்லை என முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
சேலத்தில் ரூ.441 கோடியில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம், ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைத்தார்.
இதன் பின்னர் முதல்வர் கூறியதாவது: சேலம் மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் விதமாக ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. ஈரடுக்கு மேம்பாலத்திற்கு ஜெயலலிதா பெயரும், ரயில்வே மேம்பாலத்திற்கு எம்.ஜி.ஆர்., பெயரும் சூட்டப்பட்டது.புள்ளி விவரங்கள் அடிப்படையில் கொரோனா காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெளிப்படையாக அறிவிக்கப்படுகிறது. எதையும் மறைக்கவில்லை. மறைக்கவும் முடியாது. உயிரிழப்புகளை மறைப்பதால், அரசுக்கு என்ன பயன்?
கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது. கொரோனா பாதிப்புடன் பல்வேறு நோய் உள்ளவர்களால், தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் தான் அதிகளவில் வென்டிலேட்டர்கள் உள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகபரவலாக மாறவில்லை. சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால் பாதிப்பு அதிகமாக உள்ளது. சேலம் உள்பட பல மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. கட்டுப்பாடுகள் இல்லாவிட்டால், கொரோனா வேகமாக பரவி விடும். தமிழகத்தில் அனைத்து தளர்வுகளும் அளிக்கப்பட்டுவிட்டது. வீட்டை விட்டு வெளியே சென்றால் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றினால் தான் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

AthibAn Tv