Type Here to Get Search Results !

இந்தியாவில் ஒரே நாளில் 9,985 பேருக்கு கொரோனா: 279 பேர் பலி



கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 279 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.76 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,745 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 632 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 206 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 279 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 745ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 90,787 - 3,289
தமிழகம் - 34,914 - 307
டில்லி - 31,309 - 905
குஜராத் - 21,014 - 1,313
உத்தர பிரதேசம் - 11,335 - 301
ராஜஸ்தான் - 11,245 - 255
மத்திய பிரதேசம் - 9,849 - 420
மேற்கு வங்கம் - 8,985 - 415
கர்நாடகா- 5,921 - 66
பீஹார் - 5,459 - 32
ஹரியானா - 5,209 - 45
ஆந்திரா - 5,070 - 77
காஷ்மீர் - 4,346 - 48
தெலுங்கானா - 3,920 - 148
ஒடிசா- 3,140 - 9
அசாம் - 2,937 - 4
பஞ்சாப் - 2,719 - 55
கேரளா - 2,096 - 16
உத்தரகாண்ட் - 1,537 - 13
ஜார்க்கண்ட் - 1,411 - 8
சத்தீஸ்கர் - 1,240 - 6
திரிபுரா - 864 - 1
ஹிமாச்சல பிரதேசம் - 445 - 5
கோவா - 359 - 0
சண்டிகர் - 323 - 5
மணிப்பூர் - 304 - 0
புதுச்சேரி - 127 - 0
நாகலாந்து - 127 - 0
லடாக் - 108 - 1
மிசோரம் - 88 - 0
அருணாச்சல பிரதேசம் - 57 - 0
மேகாலயா-43-1
அந்தமான் - 33 - 0
தாதர் மற்றும் நாகர் ஹவேலி - 22 - 0
சிக்கிம் - 13 - 0

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.