Type Here to Get Search Results !

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும், 5 வயது குழந்தை ஒன்றும் உயிரிழந்தனர்

After two brazen attacks in north Kashmir, intel points to ...

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும், 5 வயது குழந்தை ஒன்றும் உயிரிழந்தனர்.

இன்று (ஜூன் 26) பிற்பகல் 12:10 மணியளவில் சி.ஆர்.பி.எப்.,பின் 90-வது பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் அனந்த்நாக் மாவட்டத்தில் பிஜ்பெஹாரா என்ற பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப்., வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வீரர் ஒருவரும், 5 வயது குழந்தையும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் உயிரிழந்தனர்.

பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மற்றொரு சம்பவத்தில், வியாழன் மாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 2 பயங்கரவாதிகளை நம் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.