Type Here to Get Search Results !

தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா அரசு முடிவு

3000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி ...

 தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

டாஸ்மாக் கடைகளில் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கண்காணிக்கவும் சிசிடிவி கேமரா பொருத்துவது அவசியமாகிறது.

இதன்படி அதிகம் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகள், ஏற்கனவே திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படக் கூடிய கடைகள் குறித்த விவரங்களை தெரிவிக்க மாவட்ட மண்டல மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 755 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 695 கடைகளும், சேலம் மண்டலத்தில் 565 கடைகளும், சென்னையில் 535 கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது. ஒரு கடைக்கு 2 கேமரா வீதம் 6000 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.