Type Here to Get Search Results !

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்படலாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ...

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிதிக்கான பங்களிப்புகள் குறைந்து வருவதால் இப்போதுள்ள 8.5 சதவீத வட்டி 8.1 ஆக குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. சுமார் 6 கோடி பேர் பங்களிக்கும் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவீத வட்டி வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் தொழிலாளர் அமைச்சகம் அறிவித்திருந்தது. ஆனால், அதற்கு இது வரை நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிகளை சமாளிக்க பல சலுகைகளை அறிவித்த மத்திய அரசு, வருங்கால வைப்பு நிதிக்கான மாதாந்திர பங்களிப்பை அடிப்படை ஊதியத்தின் 12 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைத்தது.

மேலும் இந்த நிதியில் இருந்து பணம் எடுக்க நாடு முழுவதும் விண்ணப்பித்திருந்த சுமார் 31 லட்சம் பேருக்கு 11,500 கோடி ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.