Type Here to Get Search Results !

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.


latest tamil news

ஸ்ரீநகரின் ஜதிபால் சவுரா பகுதியில், வீட்டிற்குள் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். பயங்கரவாதிகளை சரணடையும்படி, அவர்களின் பெற்றோர் மூலம் பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் மறுத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அதில் இரண்டு பயங்கரவாதிகள் கடந்த 2019ம் ஆண்டு முதல் பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர். ஒருவன், கடந்த மாதம், பிஎஸ்எப் ஜவான்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு தொடர்பு உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் நடமாட்டத்திற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.