Type Here to Get Search Results !

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 14 ஆயிரம் அடி உயரத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களும் யோகா பயிற்சி

யோகா தினம், சர்வதேச கொண்டாட்டம், உற்சாகம், இந்தியா

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளிலும் பலர் பங்கேற்று யோகா செய்தனர். ஏராளமான பொது மக்கள் வீடுகளில் யோகா செய்தனர்.

சர்வதேச யோகா தினம், இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு பொது மக்கள் பலர் வீட்டிற்குள்ளேயே யோகா மேற்கொண்டனர். இந்திய ராணுவ வீரர்களும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். வடக்கு சிக்கிமில் 189,800 அடி உச்சத்தில் இந்தோ திபெத்திய எல்லை போலீசார் யோகா செய்தனர்.அதேபோல், இந்தியா - சீனா எல்லையில் 14 ஆயிரம் அடி உயரத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

அதேபோல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி செய்தனர். இதில் பா.ஜ., தலைவர் நட்டா, சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் பல கட்சி தலைவர்கள் யோகா செய்தன.

500 வீரர்கள் யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம்குன்னூர் வெலிங்டன் ராணுவை பயிற்சி மையம் வரலாற்று சிறப்புமிக்கநாகேஷ் பேரக்ஸில், 6வது சர்வதேச யோகா தின பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. ராணுவ பயிற்சி மையங்கள் கமாண்டன்ட் ராஜேஷ்வர் சிங் தலைமை வகித்து, பயிற்சியை துவக்கி வைத்து பேசுகையில், " எம்.ஆர்.சி.,யில் ராணுவ பயிற்சி மட்டுமின்றி, சிறந்த யோகா பயிற்சி குழுக்களின் மூலம் யோக பயிற்சியும், அளிக்கப்பட்டு வருகிறது. யோகா மேற்கொள்வதால் உடல்மற்றும் மன வலிமை மேம்படும். நம்நாட்டின் பழமையான கலைகளில் ஒன்றான யோகா பயிற்சியைஅனைவரும் மேற்கொள்ள வேண்டும்,"என்றார்.

இதில், 500 ராணுவ வீரர்கள்பங்கேற்று, பல்வேறு ஆசனங்கள் மற்றும் தியான நிலைகளை மேற்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.