
'நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தால், ஏழு ஆண்டுகளில், 33 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வரும் என,மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், அமித் ஷா கூறியுள்ளதாவது: வணிக ரீதியான பயன்பாட்டுக்காக 41 நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை, பிரதமர் துவக்கி வைத்துள்ளார். இந்த ஏலத்தால், ஏழு ஆண்டுகளில், 33 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையால், 2.8 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்; மாநில அரசுகளுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு, அமித் ஷா கூறியுள்ளார்.


AthibAn Tv