Type Here to Get Search Results !

உலகின் அதிவேக இணையம்: ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் அதிவேக இணையத்தை கண்டுபிடித்துள்ளனர்

At 44.2 Terabits Per Second, Australia Records the Fastest Ever ...

ஆஸ்திரேலியாவில் மூன்று பல்கலை.,களை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து உலகின் அதிவேக இணையத்தை கண்டுபிடித்துள்ளனர்.

பிரிட்டனின் தகவல் பரிமாற்றம் ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காமின், சமீபத்தில் செய்த ஆய்வு தரவுகளின் படி பிரிட்டனில் பிராட்பேண்ட் வேகத்தின் தற்போதைய வேகம் விநாடிக்கு 64 மெகாபைட்கள் (64 MBps) ஆகும். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, ஓரளவு இணைய வேகம் கொண்ட நாடாக தான் இருக்கும். இதனால், அங்கு இணைய சேவை மெதுவாக உள்ளதாக பயனர்களிடம் அதிகமான புகார்கள் வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மொனஷ், ஸ்வைன்பேர்ன் மற்றும் ஆர்.எம்.ஐ.டி ஆகிய மூன்று பல்கலை.,களை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து உலகின் அதிவேக இணைய சேவையை பதிவு செய்துள்ளனர். அதாவது, ஒரு விநாடிக்கு 44.2 டெரா பைட்ஸ் (44.2 TBps) என்ற வேகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, 1000க்கும் அதிகமான ஹெ.டி., தரத்தில் உள்ள படங்களை ஒரு விநாடியில் டவுன்லோடு செய்யும் வேகத்திற்கு சமமாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.