Type Here to Get Search Results !

அமெரிக்கா தன் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 425 ஆக ...

கொரோனா பாதிப்பை அடுத்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல்போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் 33 சீன நிறுவனங்களை சீனா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வர்த்தக அமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது. 24 சீன நிறுவனங்கள் சீன ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதால் அவை தடை செய்யப்பட்டதாகவும் 9 நிறுவனங்கள் சீனாவின் சிங்சியாங் மாகாணத்தில் மனித உரிமைக்கெதிரான வன்முறையில் ஈடுபட்டதால் தடை செய்யப்பட்டதாகவும் காரணம் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா கொரோனா பாதிப்பை முன்னிட்டு சீனாவை திட்டமிட்டுப் பழிவாங்குவதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். சீனாவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாமல் இருப்பது நல்லது எனவும் அமெரிக்கா தன் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. சீனா தனது நிறுவனங்களைக் காக்க ஆவன செய்யும் எனவும் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜான் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.