தமிழகத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி தமிழகத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்த 8,324 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாவுக்கு 111 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று 587 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது. தற்போதையை நிலவரப்படி 10,576 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை 4,844 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 5,653 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாவுக்கு 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் 833 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 7,839 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 68 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 12,275 மாதிரிகள் சோதனையிடபட்டுள்ளன. மொத்த கொரோனா தொற்று பாதிப்பில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,003 பேரும், 13 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் 13,916 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 1,358 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


AthibAn Tv