Type Here to Get Search Results !

சந்திரமுகி 2 வில் ஜோதிகாவுக்கு பதில் சிம்ரன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Chandramukhi tamil Movie - Overview

ரஜினிகாந்த் பாபா படம் தோல்விக்குப் பின்னர் 3 ஆண்டுகளாக எந்த படமும் நடிக்காமல் இருந்த நிலையில் சந்திரமுகி மூலமாக கம்பேக் கொடுத்தார். மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படம் 820 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அந்த படத்தின் வெற்றியே ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்கள் நடிக்க காரணமாக இருந்தது. இந்நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

அதில் ரஜினி கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க, பி வாசுவே இயக்குகிறார். இந்நிலையில் சந்திரமுகி படத்தின் தூணாக அமைந்த ஜோதிகா இந்த படத்திலும் நடிப்பாரா எனக் கேள்வி எழுந்தது. இப்போது அவர் வரிசையாக படங்களில் நடித்து வருவதால் அதற்கு ஒப்புக்கொள்வார் என்றே சொல்லப்பட்டது. ஆனால் அவர் இந்த படத்தில் நடிக்கவொல்லை என்பது இப்போது உறுதியாகிவிட்டது.

அவருக்குப் பதில் அந்த கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல் பாகத்தில் சந்திரமுகியாக முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட சிம்ரன், கர்ப்பமானதால் படத்தில் இருந்து விலகினார். முதல் பாகத்தில் விட்ட வாய்ப்பை இப்போது இரண்டாம் பாகத்தில் பிடித்திருக்கிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.