Type Here to Get Search Results !

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

 


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தனது இல்லம் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுப்பி, விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனத்துக்கு (CBI) மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஆம்ஸ்ட்ராஙின் சகோதரரான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், “மாநிலத் தலைவர் கொலை வழக்கில் சில முக்கிய அரசியல் தலைவர்கள் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் மாநில காவல்துறையால் வழக்கை நேர்மையாக விசாரிக்க முடியாது. மேலும், சம்பவத்தில் தொடர்புடைய சம்போ செந்திலும், மொட்டை கிருஷ்ணனும் இன்னும் கைது செய்யப்படவில்லை. காவல்துறையினால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.