Type Here to Get Search Results !

விண்வெளி உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு சீனா தடை விதித்துள்ளது

 தைவானுக்கு ஆயுதங்களை விற்ற சில அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனா பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது.

விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்புவதில் உலக நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்நிலையில் விமானம், விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு கூறுகள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப் போவதாக சீனா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பரவலை தடுக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தைவானுக்கு ஆயுதங்களை விற்ற சில அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனா பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.