Type Here to Get Search Results !

வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று திருச்சி வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று திருச்சி விமான நிலையம் வருகிறார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது.அதற்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள பைரவர் கோயிலில் ஏப்ரல் 12ஆம் தேதி அமித்ஷா சுவாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (வியாழக்கிழமை) மாலை 3.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வைரவன்பட்டி பகுதியில் உள்ள காலபைரவர் கோவிலுக்கு ஹெலிகாப்டர் மூலம் மாலை 3.25 மணிக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் மாலை 5.20 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர் மாலை 5.25 மணிக்கு தனி விமானம் மூலம் திருப்பதி செல்கிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.