Type Here to Get Search Results !

சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ரபா நகரில் இஸ்ரேல் தாக்குதல்... 3 ராணுவ வீரர்கள் பலி

 சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ரபா நகரில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் காஸாவின் பெரும்பாலான நகரங்கள் அழிந்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பின் கடைசி கோட்டையாக கருதப்படும் ரபா நகரில் இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.

சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ரபா நகரில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 2 நாட்களில் ரபா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்நிலையில் ரபா நகரில் தரைவழி தாக்குதலில் ஈடுபட்ட இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 3 பேர் கண்ணிவெடி வெடித்ததில் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.