வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களுக்கு மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஜே.பி.நட்டா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,
மேற்கு வங்கத்தில் பாஜக 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்றார். மேற்கு வங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ள அவர், சந்தோஷ்காலி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்த பின்னரே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைக்கு சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்டார்.


AthibAn Tv